width:803px height:450px செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி




தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் செயல்பட்டு வரும், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்

ஐந்து நாட்களுக்கு வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் உழவர்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு, வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நவ., 23 முதல் 27 வரை இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு, ரூ.10,000 தவிர ஜி.எஸ்.டி.,கட்டணமாக ரூ.1,800 சேர்த்து, 11,800 ரூபாய் வசூலிக்கப்படும்.பயிற்சியில் அதிகபட்சம், 20 நபர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை.

விருப்பமுள்ளவர்கள், busieness@tnau.ac.in//eximabdtnau@gmail.com மற்றும் 0422-6611310, 9500476626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




தற்போதைய செய்திகள்