width:px height:px செய்திகள்

விவசாயிகளிடம் சொட்டு நீர்பாசன முறையை ஊக்கப்படுத்த 100% மானியம்!




திருப்போரூர்: தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சாகுல் அமீது வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயத்தில் சொட்டு நீர் பாசன முறையை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட  உள்ளது.

அதன்படி திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதியில் நன்செய் 2.5 ஏக்கர், புன்செய் 5 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் தோட்டக்கலைத்துறை  அலுவலகத்தை அணுகி தங்களது நிலத்தில் சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்து 100 சதவீதம் வரை மானிய உதவி பெறலாம். மானியம் பெற  விரும்புவோர் தங்களது நிலத்தின் கணினி பட்டா, குறு விவசாயி சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை  உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.




தற்போதைய செய்திகள்