width:px height:px செய்திகள்

கொத்தமல்லி அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்




கட்டுபடியான விலை கிடைக்கவில்லை  வயல்களிலேயே காயும் கொத்தமல்லி அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்.கம்பம் பகுதியில் மல்லி விவசாயம் செய்த விவசாயிகள் அதை அறுவடை செய்யாமலே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலமாகவும், சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் பயிர் செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த மல்லி விவசாயத்தில், கடந்த மாதம் வரை விவசாயிகளிடம் கிலோ 50 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சந்தையிலும் மல்லி கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது.




தற்போதைய செய்திகள்