கரூர்: \'மானிய விலையில், வீட்டு காய்கறி விதைகளை வாங்கி பயன் பெறலாம்\' என, க.பரமத்தி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தோட்டக்கலை துறை அபி விருத்தி திட்டத்தின் கீழ், 25 ரூபாய் மதிப்புள்ள, ஐந்து வகையான விதைகள் அடங்கிய பொட்டலம், 15 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
தேவைப்படுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு போட்டோ ஆவணங்களை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில், சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
