width:870px height:488px விவசாயம்

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!




குறுகிய காலத்தில் குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் லாபம் ஈட்ட சிறு தானியங்களை பயிரிட முன்வருமாறு திருப்பூர் விவசாயிகளை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் வேடசாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைப் பருவத்தில் நெற்பயிருக்குத் தேவைப்படும் அதிகப்பட்டியான நீர்த்தேவையைக் குறைக்கவும், குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் லாபம் அடைவதற்கும் சிறுதானியங்களைப் பயிரிடலாம்.

அதாவது, கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவற்றைப் பயிரிடுவது சிறந்த யுக்தியாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, காவிரி டெல்டா விவசாயிகளை சிறு தானிய சாகுபடிக்கு ஆற்றுப்படுத்த, மாநில சமச்சீர் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை மீள் கொணர்தல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அண்மைக் காலமாக, சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து அதற்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதற்குக் காரணம் சிறுதானியங்களிலுள்ள சத்துக்களும், மருத்துவக் குணங் களும் ஆகும்.

சிறுதானியங்களை மற்ற பயிர்களுடன் ஒப்பிடு கையில் குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுக்கின்றன.

எனவே, சிறுதானிய உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக, சிறுதானிய உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சிகள் அளிப்பதுடன், சிறுதானிய பயிா்களில் புதிய புதிய ரகங்கள் மற்றும் அதற்கான இடுபொருட்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 




Site For Sale Contact : 9894832938