width:px height:px இயற்கை உரம்

மக்கிய உரம் தயாரிக்கும் முறை..!




விவசாயத்தில் லாபம் அடைவதற்கு உரங்களுக்கு செலவிடும் அளவை குறைத்து கொள்ளுதல் வேண்டும். உரங்களை எவ்வித செலவும் இல்லாமல் நாமே தயார் செய்தல் மட்டுமே இதற்கு தீர்வு தரும். அந்த வகையில் உரச்செலவை குறைக்க மக்கிய உரம் எப்படி தயார் செய்யலாம் என பார்ப்போம்.

 உரச் செலவை குறைக்க பயிர் கழிவுகளை மக்கிய உரமாக (கம்போஸ்ட்) மாற்றி பயன்படுத்தலாம்.

 கம்பு தட்டை, வைக்கோல், கேழ்வரகு தாள், மரத்தூள், பண்ணைக் கழிவுகள், நகரக் கழிவுகளை இந்த வகையில் கம்போஸ்ட் உரமாக மாற்றலாம்.

மக்கிய உரம் தயாரிக்கும் முறை :

 மக்கிய உரம் தயாரிக்க, 15 அடி நீளம், 8 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்ட குழி எடுத்து அதில் கழிவுகளை 9 அங்குல அடுக்குகளாக பரப்பி விட வேண்டும்.

 ஒவ்வொரு அடுக்கின் மேலும் பசும் சாணத்தை கரைத்து தௌpக்க வேண்டும்.

 பின்பு ஒரு கிலோ சு+ப்பர் பாஸ்பேட் உரத்தை தூவ வேண்டும்.

 குழி முழுவதும் நிரம்பிய நில மட்டத்திற்கு மேல் 2 அடி வரை கழிவுப் பொருட்களால் குழியை நிரப்ப வேண்டும்.

 15 நாட்களுக்கு திறந்த நிலையில் வைத்திருந்து அதன் பின் மண் போட்டு நன்கு மூடி விட வேண்டும்.

 குழியின் நடுபாகம் உயர்ந்தும், பக்கங்கள் சரிவாகவும் இருந்தால் மழைநீர் தேங்கி நிற்காமல் ஓடி விடும். குழியினை சுற்றி பசுந்தழை கொடுக்கும் மரங்கள் அல்லது செடி கொடிகளை வளர்ப்பது நல்லது. இந்த முறையில் கழிவுகள் நான்கு முதல் ஆறு மாதங்களில் நன்கு மக்கி உரமாகி விடும்.

உரத்தில் உள்ள சத்துக்கள் :

 தயார் செய்த மக்கிய உரத்தில் தழைச்சத்து 0.4-0.8 சதவீதம், மணிச்சத்து 0.025-0.15 சதவீதம், சாம்பல் சத்து 0.7- 10.0 சதவீதம் மற்றும் நுண்ணு}ட்டங்கள் உள்ளன.

நன்மைகள் :

 இந்த உரம் நிலத்தில் மண்ணை பொலபொலப்பாக வைத்திருந்து பயிர்கள் இலகுவாக வளர உதவுகிறது.

 மண்ணில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை பெருக்குகிறது.

 மண்ணின் வளத்தை அதிகரித்து பயிருக்கு தேவையான காற்றோட்டமும், வேர்களுக்கு உகந்த சு+ழலை ஏற்படுத்துகிறது.

 கழிவுப் பொருட்கள் நிலத்தில் மேலும் மக்கும் போது களைகளும், நோய்க்கிருமிகளும் அழிக்கப்படுகின்றன.




தற்போதைய செய்திகள்