width:640px height:426px மேலாண்மை செய்திகள்

மரங்களும் அதற்கான மண்வகைகளும்..!!




தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் லாபமும் கிடைக்கும், நிலத்தில் தன்மையையும் காப்பாற்றலாம். அந்த வகையில் எந்த மரங்களுக்கு எந்த மண் ஏற்றது என்பதை இங்கு காண்போம்.

மா :

மா பல்வேறு மண்ணிலும் வளரும். களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல. வளமான குறுமண் மிக ஏற்றது.

அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும்.

கொய்யா :

களர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்களில் வறட்சியைத் தாங்கும்.

சப்போட்டா :

இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது. ஓரளவுக்கு உவர்ப்பை தாங்கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும்.

எலுமிச்சை :

மண்ணில் கார அமில நிலை 6-5-7.0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும்.

வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற்பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

மாதுளை :

களர் மற்றும் ஈரப்பதத்தை தாங்கி வளரும். ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

பப்பாளி :

வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும்.

சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது.

சீத்தா :

மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசு+ல் கொடுக்கும்.

பலா :

ஆழமான வண்டல் நிலங்கள் ஏற்றவை. காற்றிலே வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை.

வடிகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல.


நெல்லி :


குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும். காற்றிலே மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம் தேவை.

தென்னை :

ஆழமான, வளமான மண் அவசியம், களிம்பு இல்லாத மணல் கலந்த வண்டல் மிகச் சிறந்தது.




தற்போதைய செய்திகள்