width:800px height:420px கால்நடை

கறவை மாடுகளுக்கு ஏற்படும் குளம்பு அழுகல் நோய்..!




குளம்பு அழுகல் நோய், மாடுகளின் குளம்பு பகுதியில் ஏற்படும் ஒரு தொற்று நோய் எனலாம். இந்நோய் பலவகையான நுண்ணுயிரிகளால் மாடுகளுக்கு ஏற்படுகின்றன.

நோயின் அறிகுறிகள் :

நன்றாக உள்ள மாடுகள் இந்த நோய் ஏற்பட்டால் நொண்டி நடக்கும்.

இந்த நோய் ஒரு கால்களில் ஏற்பட்டாலும், தொற்றும் காரணிகளால் மற்ற கால்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோய் ஏற்பட்ட மாடுகளுக்கு காய்ச்சல் காணப்படும்.

மேலும் பாலின் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படும்.

சிகிச்சை முறைகள் :

இந்த நோய் ஏற்பட்டால் மாடுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

இதற்கு நோயெதிர்ப்பு தன்மையுள்ள மருந்தை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மாடுகளுக்கு அளிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள் :

 கறவை மாடுகளை வாங்கும் போது குளம்புகள் சரியான அமைப்பில் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.

 அதாவது குளம்புகள் கருப்பாக இருக்க வேண்டும்.

மேலும் குளம்புகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளி குறைவாக இருத்தல் வேண்டும்.

மாடுகளுக்கு அளிக்கும் தாதுஉப்புகள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் சரியான அளவில் இருக்க வேண்டும்.

 மாடுகளை கரடுமுரடான அதாவது கூரிய கற்கள் நிறைந்த பகுதிகளில் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இயற்கை முறை தீர்வு :

குளம்பு அழுகல் நோயை குணப்படுத்த குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, பு+ண்டு 10 பல், வேப்ப இலை ஒரு கைப்பிடி, தேங்காய் அல்லது நல்லெண்ணெய் 250 மில்லி, மஞ்சள் தூள் 20 கிராம், மருதாணி இலை ஒரு கைப்பிடி ஆகியவை தேவைப்படும்.

பின்பு மேலே கூறிய அனைத்து பொருட்களையும் அரைத்து, அதனுடன் தேங்காய் அல்லது நல்லெண்ணெயை கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

தயார் செய்யப்பட்ட கலவையை ஆறவைத்து, அதனை குளம்பை சுத்தப்படுத்தி, துணியை கொண்டு பற்று போட வேண்டும்.

இதன் மூலம் குளம்பு அழுகல் (புண்) நோயை கட்டுப்படுத்த முடியும்.




தற்போதைய செய்திகள்