width:1024px height:664px கால்நடை

நாட்டுக்கோழி இனங்கள் !!




மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை போலவே நாட்டுக்கோழிகளிலும் பவ்வேறு இனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 7 வகையான கோழியினங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கு காண்போம்.

குருவுக்கோழி :

நாட்டுக்கோழிகளிலேயே மிகவும் சிறியவை குருவுக்கோழி இனமாகும்.
எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடைக்கு உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது.
தாய்க்கோழிகள் ஒரு ஆண்டில் மூன்று முறை, அடைக்கு உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை.
இரண்டு மாதத்திற்குள் குஞ்சுகளைப் பிரித்துவிடும். மேலும் இக்கோழிகள் ஒரு முறைக்கு 12 முதல் 14 முட்டைகளிடும் தன்மை கொண்டவை.

பெருவெடைக் கோழி :

பெருவெடைக் கோழி இனங்கள் நடுத்தர எடை உடையவை. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இவ்வினக் கோழிகளை வளர்க்கின்றனர்.
இந்த கோழிகள் தலையில் ஒற்றைக் கொண்டைப்பூ கொண்டவை. இவை வருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகளிடும்.

அசில் :

அசில் கோழி இந்தியாவின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாகும். இவ்வினம் பெரும்பாலும் சண்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றது.இந்த கோழிகள் குட்டையாகவும், வளைந்தும் காணப்படும்.மேலும் முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், வால் சிறியதாகவும் காணப்படும்.இவ்வகை கோழி சக்தி வாய்ந்த, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டைப்போடும் திறன் கொண்டவை.

கொண்டைக்கோழி :

கொண்டைக்கோழிகள் மிகவும் அரிதாகக் காணப்படும் இனமாகும். இதன் தலை மீது கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருக்கும்.இந்தக்கொண்டை முடி ஓங்கு பண்பின் காரணமாக ஏற்பட்டது.இது சிறியதாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குட்டைக்கால் கோழி :

குட்டைக்கால் கோழியும், கொண்டைக் கோழியைப்போல மிகவும் அரிதாக காணப்படும் இனமாகும்.
இதனுடைய வால் தரையைத் தொட்டு கொண்டு போகின்ற அளவிற்கு கால்கள், குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர்.

கடக்நாத் அல்லது கருங்கால் கோழி :

இவ்வினம் பொதுவாக கலமாசி என்று அழைக்கப்படும், கருப்பு சதையுடைய கோழி ஆகும்.
இதன் உடல் உள் உறுப்புகள் கருமை நிறமாக இருக்கும். உடலின் தசைகள், நரம்புகள், மூளை முதலியவை கருப்பு நிறத்தில் காணப்படும்.இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமியாகும்.அதிக வெப்பத்தையும், குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.கோழிக்குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பின்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படும்.பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும்.தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும்.

மொட்டைக்கழுத்துக் கோழி :

இவ்வினத்தின் கழுத்துப் பகுதியில் இறகுகள் இல்லாமல் வெறுமையாகவும், அல்லது கழுத்தின் முற்பகுதியில் கொத்தாகச் சிறகுகள் இருப்பதால், இதற்கு மொட்டைக்கழுத்துக் கோழி என்று பெயர்.இவ்வினம் நீளமாக உருண்டை வடிவக் கழுத்துடைய இனமாகும்.பருவ வயதை அடையும் பொழுது சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.


இதர இனங்கள் : சிட்டகாங் :

சிட்டகாங் கோழியினம் மிகப்பெரிய உடல் கொண்டது. இது சிறந்த சண்டையிடும் கோழி ஆகும்.இதன் வால்பகுதி தொங்கிக் கொண்டிருக்கும். இந்த இனம் குறைந்த முட்டையிடும் திறன் கொண்டது.இந்த சேவலின் உடல் எடை 3.5 - 4.5 கிலோவும், கோழியின் உடல் எடை 3 - 4 கிலோவும் இருக்கும்.

பஸ்ரா :

பஸ்ரா இன நாட்டுக்கோழிகள் பொதுவாக இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.இந்த கோழியின் இறகுகள் கருப்பு, வெள்ளை நிறம் கலந்தும், கழுத்தின் மேற்புறம், வால்பகுதி, தோள்பட்டை இறக்கைகள் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

நிக்கோபாரி :

நிக்கோபாரி இனங்கள் பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளைநிறத்தில் காணப்படும்.சிறிய உடல் அமைப்புடனும், குட்டையான கால்கள் மற்றும் கழுத்துடன் காணப்படும்.நாட்டுகோழியினங்களிலேயே, நிக்கோபாரி இனம் அதிக முட்டையிடும் குணாதிசயம் கொண்டது.




தற்போதைய செய்திகள்