width:px height:px கால்நடை

BH - 18 தீவனப்புல் சாகுபடி.




கறவை மாட்டு பண்ணைகள் எப்போது இந்தியாவில் தோன்ற ஆரம்பித்தனவோ, அது முதல் இந்த புல் கரனை சாகுபடி அத்தியாவசியம் ஆகிவிட்டது. கட்டி வைத்து மாடுகளை மேய்க்கும் காலம் ஆரம்பித்த உடன் முதலில் நட ஆரம்பித்த பசுந்தீவனம் இந்த தீவன கரனை புல்.


இதில் பல வகை உண்டு. அதாவது co-4 மற்றும் 5 ரகங்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ரகங்கள். இவை தற்சமயம் நல்ல மகசூல் தருவதோடு அதிக பயன்பாட்டில் உள்ளன. இவை நேப்பியர் புல் மற்றும் கம்பு இவற்றின் கலப்பு ஆகும்.


சிகப்பு நேப்பியர் புல் மற்றும் கம்பு இவற்றின் கலப்புதான் BH - 18. ஆந்திர மாநிலத்தில் பிரபலமாக வளர்க்கப்படும் கரனை புல் ரகங்களில் இந்த BH - 18 சிகப்பு நிற தண்டு உடைய இந்த ரகமும் ஒன்று. கரும் பச்சை நிறம் உடைய இலைகள் மற்றும் இலைகள் மீது அதிக அளவில் முட்கள் இருக்காது. ஆடு, மாடுகள் விரும்பி உண்னும் ரகம். தண்டுகளை கூட மிச்சம் வைக்காமல் தின்று விடும். அதிகம் முற்றி விட்டால் ஒழிய Chaff cutter ல் வெட்டி போட தேவை இல்லை. இந்த புல்லில் புரத சத்து 9.5 முதல் 10% வரை இருப்பதாக அறியப்படுகிறது.


இடைவெளி இரண்டு அடி வரிசைக்கு வரிசை விடவேண்டும். கரும்பு நடவு செய்வது போல் வரிசையாக சால்களில் படுக்க வைத்து நடவு செய்ய வேண்டும். காரணம் சரியான இடைவெளியை பராமரித்தால் மட்டுமே அதிக மகசூல் எடுக்க இயலும். புல் கரனை முளைத்த உடனே ஒரு மாதத்திற்குள் கை களை எடுத்து மண் அனைக்க வேண்டும். அப்போது தான் அதிக தூர்கள் வெடித்து அதிக மகசூல் கிடைக்கும். முதல் அறுவடை நட்ட 70 முதல் 80 நாட்களில் வரும். அதன் பிறகு மாதம் ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.


தொடர்ந்து மூன்று வருடம் அறுவடை செய்யலாம். மண் தன்மைக்கு ஏற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறைப்படி சாகுபடி சிறப்பு. வாரம் ஒருமுறை பழக்கரைசல் இலைகள் மீது தெளிப்பதால் வேகமான வளர்ச்சி கிடைக்கும். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதால் சில சமயம் நுன்னூட்ட சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு.


பசுந்தீவனங்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளதால் கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும். இது போன்ற கரனை புல் தொடர்ந்து கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் அவற்றின் சினை பிடிக்கும் சுழற்சி ஊக்குவிக்கப்படும். கறவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது பதினைந்து கிலோ பசுந்தீவனம் தேவை. ஒரு மாட்டிற்கு குறைந்தது இருபது சென்ட் அளவில் அளவில் பசுந்தீவனம் நடவு செய்யலாம். தொடர்ந்து இந்த புல்லை கறவை மாடுகளுக்கு கொடுப்பதால் பாலின் அளவு அதிகரிக்கும். இது போன்ற கரனைப்புல் அதிகம் கொடுப்பது மூலம் பால் கறக்கும் மாடுகளுக்கு அடர்தீவனத்தேவை ஓரளவு குறையும்.


வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 25 டன்கள் வரை மகசூல் எடுக்க வாய்ப்பு. மற்ற தீவன கரனை புற்களை கொடுப்பதை காட்டிலும் இந்த BH -18 தீவன புல்லை கால் நடைகளுக்கு கொடுப்பதால் பால் சற்று அதிகரிப்பதாக விவசாயிகள் கருத்து.




தற்போதைய செய்திகள்