width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

கத்தரியில் காய்துளைப்பன் கட்டுப்படுத்தும் முறைகள்




நாள்தோறும் கத்தரிக்காய் மக்களின் பயன்பாட்டில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ளது. இப்பயிரானது டிசம்பர் முதல் ஜூலை மாதம் வரை தமிழகத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. கத்தரியில் ஆன்தோசையனின் மற்றும் ஃப்ளேவோனாய்டஸ் என்ற இரண்டாம் வேதிக்கூறுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


தற்பொழுது கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பன் தாக்கம் அதிகம் தென்படுகிறது. ஆதலால் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கண்போம்.

சேத அறிகுறி

புழுக்கள் குருத்துப் பகுதியில் உள்ள தண்டைத் துளைத்து உட்சென்று திசுக்களை உண்பதால் குருத்துக்கள் காய்ந்து விடும்.

பூ, பிஞ்சு மற்றும் காய் ஆகியவற்றை சேத்தப்படுத்துவதால் அவை உதிர்ந்து விடும்.

பெரிய காய்களில் புழு துளைத்து உட்சென்று திசுக்களை உண்டு கழிவுப் பொருட்களை வெளித்தள்ளப்பட்டு காணப்படும்.

அந்துப்பூச்சிகளின் இறக்கையில் வெண்மை நிறத்துடன் கூடிய கரும்புள்ளிகள் காணப்படும்.

முட்டையிலிருந்து வரும் இளம் சிவப்பு புழுக்கள் ரோமங்களுடன் காணப்படும்.

வளர்ந்த புழுக்கள் தண்டு மற்றும் காய்களில் கூட்டுப்புழுவாக மாறி பின்னர் அந்துப்பூச்சிகளாக உருமாறும்.

கட்டுப்பாட்டு முறைகள்

தாக்கப்பட்ட பயிரின் பாகங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.

நீளம் மற்றும் குறுகலான காய் உள்ள இரகங்களை பயன்படுத்தலாம்.

வெப்பங்க்கோட்டை வடிநீர் 5 சதம் அல்லது வெப்ப எண்ணெய் 3 சதம் தெளிக்கலாம்.

பச்சை மிளகாய் மற்றும் பூண்டுசாறு 20 மி.லி/லிட்டர் அல்லது இலை கதம்பசாறு 30 மி.லி/லிட்டர் என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளித்து பூச்சிகளை விரட்டலாம்.

கத்தரியில் கவர்ச்சி பயிராக வெள்ளரி அல்லது வெங்காயத்தை 10:1 என்கிற விகிதத்தில் பயிரிட்டு பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 12 இனகவர்ச்சி பொறி அமைக்கலாம்.

எமாமேக்டின்பென்ஜோவோட் மற்றும் ப்ளுபென்டையமைட்டு 10 கி/10 லிட்டர் அல்லது க்லோர்பைரிபாஸ் மற்றும் டிரையாசோபாஸ் 3 மி.லி/லிட்டர் என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.




தற்போதைய செய்திகள்