width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

முள்ளங்கி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி




தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கியை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதத்துக்கு முன், ஒரு கிலோ முள்ளங்கி, ரூ.15க்கு உழவர் சந்தைகளில் விற்பனையானது.

அதன் பின், ரூ.4 முதல் ரூ.8 வரை மட்டுமே விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

சிலர், முள்ளங்கியை அறுவடை செய்யாமல், வயலில் கால்நடைகளுக்கு உணவாக்கி வந்தனர். இந்நிலையில் இதன் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.8க்கு விற்பனையானது, புதன்கிழமை அன்று ரூ.12 வியாழக்கிழமை ரூ.14 என விலை உயர்ந்து விற்பனையானது.

ஆறு மாதத்துக்கு பின், விலை உயர்வைக் கண்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




தற்போதைய செய்திகள்