width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

தக்காளியில் புகையிலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்




தக்காளி ஓர் முக்கிய காய்கறிப்பயிரகும். இது காய்கறி பயிர்களின் சாகுபடியில் உலகளவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.இந்தியாவில் 4.5 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் விட்டமின் ஏ,பி மற்றும் சி அடங்கியுள்ளது. சூப், ஊறுகாய் போன்ற மதிப்புக்கூடிய பொருட்களை தக்காளியில் இருந்து தயார் செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடியில் புகையிலைப் புழுக்கள் தாக்கத்தினால் பெருமளவு மகசூல் குறைகிறது. ஆதலால் இந்த கட்டுரையில் புகையிலைப் புழுக்கள் ஏற்படுத்தும் சேதம் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி அறிவோம்.

சேத அறிகுறிகள்:

புழுக்கள் செடிகளின் இலைகள் மற்றும் தண்டு பகுதிகளை கடித்து உண்ணும்.

இளம் புழுக்கள் தாக்கத்தினால் இலைகள் சல்லடைப் போன்று காணப்படும்.

வளர்ந்த புழுக்கள் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக செடிகளை தாக்கி இலைகள் முழுவதும் தின்று விடும்.

இப்புழுக்கள் பச்சை காய்புழுக்களை போல காய்களில் வட்ட வடிவில் துளையிட்டு உட்புறபகுதிகளை உண்ணும்.

வாழ்க்கை சுழற்சி: ஸ்போடோப்டரா லிட்டுரா.

அந்துப்பூச்சிகள் பழுப்பு நிறதுத்துடன் பெரியதாக காணப்படும்.

மஞ்சள் நிறக்கோடுகளுடன் கூடிய கருமையான முன்னிறக்கையும் மற்றும் வெண்மையான பின்னிறக்கையும் கொண்டிருக்கும்.

பெண் பூச்சிகள் இலையின் அடிப்புற பகுதிகளில் முட்டையிடும்.

முட்டையில் இருந்து இளம் புழுக்கள் வெளியே வரும்.

பின்பு நன்கு வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கு அடியில் சென்று கூட்டுபுழுவாக உருமாற்றம் அடையும்.

முட்டை முதல் அந்துப்பூச்சிகளாக உருமாற்றம் பெறுவதற்கு சுமார் 20 முதல் 25 நாட்கள் தேவைப்படுகிறது.

பொருளாதர ஆரம்ப சேதநிலை:100 மீட்டருக்கு 8 முட்டை குவியல் (அல்லது) 10 சத காய்கள் சேதம்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

நிலத்தை கோடைகாலங்களில் ஆழ உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.

முட்டை குவியல் , இளம் புழுக்கள் மற்றும் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்கலாம்.

இரவு நேரங்களில் ஏக்கருக்கு ஒரு விளக்குபொறி வைத்து அந்துபூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

வரப்பு பகுதியில் ஆமணக்கு செடிகளை கவர்ச்சி பயிராக பயிரிடலாம்.

எக்டருக்கு 15 இனக் கவர்ச்சி பொறிகளை அமைக்கலாம்.

புரோட்டினியாவ என்.பி. வி. வைரஸ் (ஏக்கருக்கு 250 நோயுற்ற புழுக்கள்)கிருமிகளுடன் 2.5 கிராம் வெல்லம் மற்றும் 0.1 சதம் பீபால் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கலாம்.

நச்சுகவர்ச்சி உணவு: ஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசிதவிடு +500 கிராம் வெல்லம் +500 கிராம் கார்பரில் மற்றும் தண்ணீர் ஆகிய அனைத்தும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மாலை நேரங்களில் வைக்க வேண்டும்.

நோவலுரன் மற்றும் எமாமொக்டின் பென்சாயோட் 1.5 மி.லி/லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.




தற்போதைய செய்திகள்