width:px height:px மேலாண்மை செய்திகள்

சின்ன வெங்காயம் அறுவடைப் பணிகள் தீவிரம் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி




திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டாரம், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட பிஏபி 3ம் மண்டல பாசன நிலங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். நீர் இருப்புக்கு ஏற்றவாறு காய்கறிகள், தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டது. அவ்வகையில் சின்ன வெங்காயம் சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.

விதைகள் மூலமாக நாற்றை உற்பத்தி செய்தும், வெங்காயத்தை நேரடியாகவும் நடவு செய்யப்பட்டது. அவற்றை விவசாயிகள் முறையாக பராமரிப்பு செய்து வந்தனர். நீராதாரங்களில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீர் பற்றாக்குறையின்றி, நன்றாக வளர்ந்து அறுவடையை எட்டி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் அதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.45 வரையிலும் விற்பனையாகி வருகிறது. வெங்காயத்திற்கு தரத்திற்கு ஏற்றவாறு ஓரளவுக்கு விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




தற்போதைய செய்திகள்