width:1200px height:628px செய்திகள்

கறிக்கோழி விலை கடும் சரிவு




ஊரடங்கு காரணமாக, கறிக்கோழி கொள்முதல் விலை, ஒரே நாளில் ரூ.24 குறைந்ததால், பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு பி.சி.சி., கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறது. ஊரடங்கால், இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், விற்பனை குறைந்து, கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.24 குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், கோழிகள் தேக்கமடையும் என்பதை கருத்தில் கொண்டு, உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.84 ஆக இருந்த கொள்முதல் விலை, தற்போது ரூ.60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தீவன மூலப்பொருள் விலை உயர்வு, ஊரடங்கு மற்றும் விற்பனை சரிவு உள்ளிட்டவற்றால், கறிக்கோழி தொழில், நெருக்கடியில் உள்ளது. வரும் நாட்களில் கொள்முதல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்