width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

அழுகும் தர்பூசணியால் விவசாயிகள் கவலை




கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, சேந்திரக்கிள்ளை, தச்சக்காடு, சம்மந்தம், அத்தியாநல்லூர், சிலம்பிமங்களம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் மானாவாரி நிலங்களில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தர்பூசணி பயிர் செய்தனர். அவை நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தர்பூசணி விற்பனை பாதித்துள்ளது. இதனால், தர்பூசணியை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், தர்பூசணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாய நிலங்களிலேயே பாழாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு, ரூ.30,000 செலவு செய்தும், உற்பத்தி செய்த தர்பூசணியை விற்பனை செய்ய முடியவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.




தற்போதைய செய்திகள்