width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

வெண்டையில் காய்ப்புழுக்கள் நிர்வாகம்




வெண்டை சாகுபடியில் காய்ப்புழுக்கள் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகளவில் தாக்கி சேதம் உண்டாக்குகின்றன. காய்ப்புழுக்களால் சுமார் 20 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காய் புழுக்கள்
வெண்டையை இரு வகையான காய்ப்புழுக்கள் தாக்கி சேதம் உண்டாக்குகின்றன.

(i) புள்ளிக்காய்ப்புழு


இப்புழுக்கள் வெண்டையில் பூக்கள், காய்கள் தோன்றுவதற்கு முன்பே இளம் தண்டுப்பகுதியைத் துளைத்து உண்பதால் புழு தாக்கிய பகுதிக்கு மேல் உள்ள தண்டுப்பகுதி வாடி பின்பு காய்ந்து விடும். பூக்கள் மற்றும் காய்கள் தோன்றிய பிறகு புழுக்கள் இவை இரண்டையும் தாக்கி சேதப்படுத்துகிறது.

புழுவினால் தாக்கப்பட்ட பூ மொட்டுகள், பூக்கள் மற்றும் சிறிய காய்கள் காய்ந்து உதிர்ந்து விடும். வளர்ந்த காய்களில் புழுக்கள் குடைந்து உள்ளே சென்று விதைகள், உள்சதை பகுதிகளை தின்று அதனுடைய எச்சத்தையும் காயின் உள்ளேயே இடுவதால் காய்கள் நாம் உண்ணும் தகுதியை இழந்து விடுகின்றன. மேலும் புழு தாக்கிய காய்கள் சுருண்டு, வளைந்து உருமாற்றம் அடைந்துவிடும். இளம் பயிர்களில் இப்புழுக்கள் குருத்துப்பகுதியை தாக்கி சேதப்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மடிந்து விடவும் வாய்ப்புள்ளது.

(ii) பச்சைக் காய்ப்புழு
இளம் புழுக்கள் குருத்துப் பகுதியையும், இலைகளையும் உண்டு சேதப்படுத்தும். பூ மொட்டுகள், பூக்கள் மற்றும் காய்கள் தோன்றிய பிறகு அவற்றையும் தாக்கி சேதமுண்டாக்கும். புழுக்கள் தன் உடலின் முன்பகுதியை மட்டும் காயினுள் துளைத்து தாக்கும்.

காய்ப்புழுக்களுக்கான மேலாண்மை முறைகள்

புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்கவேண்டும்.

பறவைகள் புழுக்களை பிடித்து உண்ணும் வகையில், பறவை தாங்கிகளை ஏக்கருக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைக்கலாம்.

காய்ப்புழுக்களின் அந்து பூச்சிகளை கவர்ந்திழுக்க ஒரு ஏக்கருக்கு ஐந்து என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும்.

அந்துப்பூச்சிகளின் நடமாட்டம் தென்பட்டவுடன் டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 40,000 வீதம் ஒரு வார இடைவெளிகளில் 3-5 முறை வெளியிட வேண்டும்.

கிரைசோபெர்லா கார்னியா என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சியின் முதல் பருவப்புழுக்களை ஏக்கருக்கு 40,000 வீதம் வெளியிடலாம்.

ஒட்டுண்ணிகளான செலோனஸ் பிளாக்பர்னி, பிரக்கான் பிரிவிகார்னிஸ் போன்ற குளவியினங்களை ஏக்கருக்கு 400 வீதம் பூக்கும் தருணம் முதல் 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை வெளியிடவேண்டும்.

பின்வரும் இரசாயன பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

அசாடிராக்டின் 0.03% 50 மில்லி அல்லது எமாமெக்டின் பென்ஸோயேட்
5 எஸ். ஜி. 3 கிராம் அல்லது குயினால்பாஸ் எ.எஃப். 15 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

றிப்பு: ஒரு ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி தெளிக்க 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.




தற்போதைய செய்திகள்