width:1200px height:628px செய்திகள்

பருத்தி சாகுபடிக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்




திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியில் போதிய மழையின்மை, அதிக வெப்பம் போன்ற பருவ நிலை மாற்றத்தால் விவசாயிகள் சாகுபடியை மாற்ற துவங்கியுள்ளனர். பருத்தி, கொத்தமல்லி போன்ற வகை சாகுபடி 10 ஆண்டுகளாக இப்பகுதியில் குறைந்து வருகிறது. சமீபத்தில் கோடை மழை பரவலாக பெய்து உள்ள சூழலில், கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட கரிசல் மண் பகுதியில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை துவக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

இது குறித்து திப்பம்பட்டி விவசாயி ஒருவர் கூறுகையில், மக்காச்சோள சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் உழவு முதல் அறுவடை வரை பராமரிப்பதற்கான செலவு அதிகரித்துள்ளது. முந்தைய பருத்தி சாகுபடிக்கு மாறுவதன் மூலம் நஷ்டத்தை ஈடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.




தற்போதைய செய்திகள்