width:1200px height:628px செய்திகள்

கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட வாய்ப்பு




கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்படும் வாய்ப்புள்ளதால் பண்ணைகளில் நீர்த் தெளிப்பான்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 டிகிரியாகவும், 74 டிகிரியாகவும் நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் இனிவரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை எதிர்பார்க்கலாம். பகல் மற்றும் இரவு வழக்கம்போல் 98.6 டிகிரி, 74 டிகிரி அளவிலே காணப்படும், காற்று தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி,மீ வேகத்தில் வீசும்.

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் கோழிப் பண்ணைகளில் தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இன்னும் இரு மாதங்களுக்கு அதிக அளவிலான காற்றுடைய வானிலையே நிலவும், தீவன விரயத்தைத் தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணையைச் சோ்க்கலாம். மேலும், உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவைக் கட்ட வேண்டும். கரோனா நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கால்நடைகள், கோழிப்பண்ணையாளர்கள் பண்ணைக்குள் வெளியாட்களை அனுமதிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்