width:1200px height:628px செய்திகள்

கரும்பு சாகுபடி மீண்டும் துவக்கம்




செங்கல்பட்டு மாவட்ட விவசாயத்தில், கரும்பு சாகுபடி குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளில், விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். பெரும்பாலும், பாலாற்று படுகை பகுதிகளில், கரும்பு பயிரிடப்படுகிறது. பாலாற்று மணல் கொள்ளையால், மணற்படுகை அழிந்து, ஆறு வறண்டது. கடல்நீர், ஆற்றில் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசமடைந்தது. நீராதார பாற்றாக்குறை, உவர்ப்புத்தன்மையால், கரும்பு சாகுபடி குறைந்தது.

முகத்துவார, கடலூர், வாயலூர், ஆயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நீண்டகாலம் கரும்பு பயிரிடப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், 2019ல், கடலூர் – வாயலூர் படுகை பகுதியில், நீர் செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது. மழையின் போது, 1 டி.எம்.சி., நீர் தேங்கி, பல மாதங்களுக்கு நீடிக்கிறது. இதனால், கடல்நீர் ஊடுருவல் தடைபட்டுள்ளது. தற்போதைய நீராதார வளத்தால், விவசாயம் செழிக்கிறது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட, கரும்பு சாகுபடியையும் துவக்க விவசாயிகள் விரும்புகின்றனர். கல்பாக்கம் அடுத்த, வாயலூர் பகுதியில், நீண்டகாலத்திற்கு பின், தற்போது கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்