width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

நிலக்கடலையில் களைக்கட்டுப்பாடு




விதைத்த 20 நாளில் கைக்களை எடுத்தும் 40 நாளில் ஜிப்சம் இட்டு மண்வெட்டி கொண்டு களைவெட்டி செடிகளுக்கு மண் அணைத்தும் நிலக்கடலையில் கணிசமான மகசூல் பெறலாம்.


மேற்கண்டவாறு இரண்டு முறை ஆட்களைக் கொண்டு களை எடுக்க முடியாத பட்சத்தில் விதைத்த 3 நாட்களுக்குள் களை முளைக்கும் முன்பு தெளிக்கும் களைக்கொல்லியைத் தெளித்தும் 40வது நாளில் மண்வெட்டி கொண்டு களைவெட்டி மண் அணைத்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

அவ்வாறு இல்லையெனில் களைகள் 2 அல்லது 3 இலைப் பருவத்தில் இருக்கும் போது அதாவது நிலக்கடலைச் செடி விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு களை முளைத்த பின்பு தெளிக்கும் இமாசிதபிர் என்னும் களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம். இக்களைக் கொல்லியை தெளிக்கும் போது மண்ணில் ஈரம் இருக்க வேண்டும். மேலும், நிலக்கடலைப் பயிர் விதைத்த 20 நாட்களுக்கு முன்பாக இக்களைக் கொல்லியைத் தெளித்தால் பயிர் வளர்ச்சி குறைத்து மகசூல் பாதிக்கப்படும்.

களைக்கொல்லி தெளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பரிந்துரைக்கப்பட்ட களைக்கொல்லிகளை சரியான அளவில் சரியான பருவத்தில் தெளிக்க வேண்டும். பரிந்துரையை விட அதிகமாகத் தெளித்தல் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் குறைவாகத் தெளித்தால் களைகள் கட்டுப்படாது ஏன் சரியான பருவத்தில் தெளிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேற்கூறப்பட்ட காரணமே பொருந்தும்.

களைக்கொல்லி தெளித்த இடத்தில் களைக்கொல்லி மீதமாகிவிட்டது என்பதற்காக இரண்டாவது முறை திரும்பவும் தெளிக்கக்கூடாது.

மேற்கண்ட பரிந்துரைகளைப் பின்பற்றி நிலக்கடலைப் பயிரில் அதிக மகசூல் எடுக்கும்படி நம்பியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தூ.தே.முரளி. எம்.எஸ்.ஸி. (விவ) கேட்டுக் கொண்டுள்ளார்.




தற்போதைய செய்திகள்