width:1200px height:628px செய்திகள்

மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் வியாபாரிகள் யாரும் வராததால் கவலை




திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில், பாசன நீர் தட்டுப்பாடு உள்ள விளைநிலங்களில், மாற்றுப்பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சாகுபடியான மரவள்ளிக்கிழங்கு தற்போது அறுவடை நடக்கிறது. ஆனால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை.

இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி உள்ளிட்ட பலவகை பொருட்கள் தயாரிக்க, மூலப்பொருளாக பயன்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முடங்கியுள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை.

கிழங்குகளை நடவு செய்த எட்டு மாதத்தில் இருந்து அறுவடை தொடங்கலாம். தொடர்ந்து 12 மாதம் அறுவடையில் ஈடுபடலாம். ஆனால், ஓராண்டு கடந்தும் கிழங்குகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது. இது குறித்து, அரசு கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என தெரிவித்தனர்.




தற்போதைய செய்திகள்