width:1200px height:628px செய்திகள்

தென்னை நார் கழிவு உரங்களை பிரபலபடுத்துதல் பயிற்சி




சிவகங்கை மாவட்டம், மானமதுரை வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு விவசாயிகளுக்கான உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி தென்னைநார் கழிவு உரங்களை பிரபலபடுத்துதல் தலைப்பில் கோவிட்-19 அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியினை மானாமதுரை, வேளாண்மை உதவி இயக்குநர் ரா.பத்மாவதி, தொடங்கி வைத்தார். விருதுநகர், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் முனைவர் சி.ராஜாபாபு, தென்னைநார் கழிவு உரங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

தென்னை நார்கழிவு உரம் தயாரிக்கும் முறைகள்
தென்னையில் இருந்து கிடைக்கும் தென்னைநார் கழிவுகளை மூலப்பொருளாக கொண்டு உரம் தயாரிக்கபடுகிறது. தென்னை மரங்களுக்கிடையிலோ அல்லது நிழலிலோ உர குவியல் அமைக்க இடத்தை தேர்வு செய்தல் மிக்க பயனளிக்கும் .சிமெண்ட் பூசப்பட்ட தரை மிகவும் உகந்தது. தென்னை நார் கழிவுகளை 4 அடி நீளம் 3அடி அகலம் 3 அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு 5 கிலோ யூரியாவை தூவி விட வேண்டும். அதற்கு மேல் தென்னைநார் கழிவுகளை பரப்பி விட்டு 200 கிராம் புளுரோட்டஸ் (காளான் வித்துக்கள்) இட வேண்டும். தென்னைநார் கழிவு மற்றும் தழைசத்து மூலப்பொருட்களை ஒன்றன்மேல் ஒன்றாக 4 அடி உயரத்திற்கு பரப்புவது நன்று. இக்குவியலை 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து கிளறி விட வேண்டும். நல்ல தரமான உரங்களை பெற 60 சதவீத ஈரப்பதம் மிகவும் அவசியம். இரண்டு மாதங்கள் கழித்து தரமான தென்னைநார் கழிவு உரம் கிடைக்கும். இந்த உரங்களை அணைத்து வகையான பயிர்களுக்கும் உபயோகிக்கலாம் என்று விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இப்பயிற்சியில் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், மற்றும் இளையான்குடி ஆகிய வட்டாரங்களில் இருந்து விவசாயிகள் கலந்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன், சதீஷ் மற்றும் உழவன் நண்பன் தவமணி ஆகியோர் செய்திருந்தனர்.




தற்போதைய செய்திகள்