width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?




இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், நைனார் கோவில், கடலாடி வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது. இதன் தாக்குதலால் பஞ்சின் தரம் குறைந்து விடுவதோடு சுமார் 33 சதவீத மகசூல் ஏற்படுகிறது.

சாதகமான சுழ்நிலை மற்றும் பரவும் முறைகள்

அதிகபட்ச வெப்ப நிலை 35 0ஊஃ குறைந்தபட்ச வெப்பநிலை 25 0ஊ மற்றும் ஈரப்பதம் 67 சதம் ஆகியவை இளஞ்சிவப்பு காய்ப்புழு பெருகுவதற்கு சாதகமான காரணிகளாகும்.

சேத அறிகுறிகள்
இதன் தாக்குதலால் பூவானது ரோஜா இதழ்கள் போன்று ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். பொதுவாக, இவை காய்களின் நுனி வழியாக உள்ளே சென்று சேதத்தை ஏற்படுத்தும். இவை வளர்ச்சியடைந்து வரும் விதைகளைத் தாக்குகின்றன. காய்களானது வளர்ச்சியடைவதற்கு முன்பே உதிர்ந்து விடும். காய்கள் சரியாக வெடிக்காது. காய்களானது அழுக ஆரம்பிக்கும். பஞ்சின் தரம் குறைந்துவிடும். விதைகளிலுள்ள எண்ணெய் அளவும் குறைந்துவிடும்.

வாழ்க்கை பருவம்
அந்துப் பூச்சியானது பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை முட்டைகளை தனித்தனியாக இலை, இலைக்காம்பு மற்றும் காய்களில் இட்டுச் செல்லும். முட்டையிலிருந்து வெளியே வரும் புழுவானது சிவப்பு மற்றும் வெண்மை நிறத்தில் இருக்கும். புழுப்பருவமானது 14 முதல் 29 நாட்களை கொண்டது. இவை மண்ணில் உள்ள இலைகள் மற்றும் சருகுகளுக்குள் சென்று கூட்டுப் புழுவாக மாறுகின்றன.

பொருளாதார சேத நிலை: 10 சதவீத பாதிக்கப்பட்ட காய்கள்

மேலாண்மை முறைகள்
. புழுவினால் தாக்கப்பட்ட பூக்கள், பூ மொட்டுகள் மற்றும் காய்களை பொறுக்கி அழிக்க வேண்டும்.
. இனக்கவர்ச்சி பொறி ஒரு எக்டெருக்கு 12 என்ற அளவில் வைத்து ஆண் அந்துப் பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
. முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா டாய்டியே பெக்டிரியெ ஒரு எக்டெருக்கு 40,000 என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை விதைத்த 45ம் நாள் முதல் விடவேண்டும்.
. ஒரு எக்டெருக்கு எமாமெக்டின் பென்சொயெட் (5 எஸ்ஜி) 190-220 கிராம் அல்லது புரோபெனோபாஸ் (50 இசி) 1500-2000 மிலி அல்லது தயொடிகார்ப் (75 டபிள்யஜுபி) 1000 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் (50 இசி) 1000-1200 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.




தற்போதைய செய்திகள்