width:1200px height:628px செய்திகள்

டிஸ்கோ கத்தரி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி




ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை அதிகரித்து கிலோ ரூ.20க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதிகளில் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. டிஸ்கோ கத்தரி ரகத்தை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர். கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் டிஸ்கோ கத்தரி கிலோ ரூ.14க்கு விற்பனையானது. தற்போது பல இடங்களில் அறுவடை முடிந்து விட்டதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் டிஸ்கோ கத்தரி விலை நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




தற்போதைய செய்திகள்