width:1200px height:628px செய்திகள்

பூச்சி தாக்குதலிலிருந்து மரவள்ளியை காப்பது குறித்து ஆலோசனை




பூச்சி தாக்குதல்களிலிருந்து மரவள்ளி பயிரை காப்பது குறித்து உளுந்தூர்பேட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் கள ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பில்லூர், ஆசனூர், பாலி, ஏ.சாத்தனூர், திருப்பெயர், எறையூர் உள்ளிட்ட கிராமங்களில் 150 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மரவள்ளியில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏ.சாத்தனூரில் பயிர்களை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் முருகன் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட நுனி குருத்துகளை அகற்ற வேண்டும். மாவுப்பூச்சிகளால் பாதிக்கப்பட்ட காய்ந்த செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மரவள்ளி பயிரினை அழிவிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.




தற்போதைய செய்திகள்