விவசாயத்தில் அதிக மகசூல் பெற உதவுவதில் காய்கறிப் பயிர்களும் சிறந்தவை. அதிலும் கீரை வகை பயிர்களில் அதிக மகசூல் ஈட்ட முடியும். அந்த வகையில் இன்று தண்டு கீரை சாகுபடி பற்றி இங்கு காணலாம்.
தண்டு கீரை சாகுபடிக்கு சித்திரை, ஆடி, மார்கழி, மாசி பட்டம் ஏற்றவை. இவற்றிற்கு நல்ல மண்ணும் மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட இரு பண்பாட்டு நிலமும் ,செம்மண் நிலம் உகந்தது. அதிக களிமண் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவை கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு நீர் பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவுகளில் பாத்திகள் அமைக்க வேண்டும். கீரை விதைகலோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும் .அப்பொழுதுதான் விதைகள் சீராக விழுந்து முளைக்கும் .பிறகு கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
விதைகள் விதைத்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்ச வேண்டும் .விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். ..இக்கீரைக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை .ஆனால் பாத்தி எப்போதும் ஈரமாக இருக்கவேண்டும். நிழல் பகுதியாக இருக்கக் கூடாது .அதிகம் வெளிச்சம் தேவைப்படும்.
ஜீவாமிர்தக் கரைசலை 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். .இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.கலைகளால் கீரைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே 10 முதல் 15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையைப் பொருத்து பயிர் கலைத்தல் வேண்டும் .கீரைகளின் பூச்சிகள் தாக்குதல் காணப்பட்டால் இஞ்சிபூண்டு கரைசலை தெளிக்க வேண்டும். .இதனால் பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
விதைத்த 35 முதல் 40 நாட்களில் கீரைகள் அறுவடைக்கு தயாராகி விடும்.
