தென்னந்தோப்பில் ஊடுபயிராக கோகோ மற்றும் மிளகு சாகுபடி செய்யலாம். ஒரு சமயத்தில் இரண்டு வருமானம் பெறலாம். கோகோவின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சாக்லேட் மற்றும் கேக் ஊட்டசத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாக பயன்படுகிறது.
எப்படி பயிரிடுவது
இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஓரு கோகோ செடிநடுவது, அல்லது இரண்டு தென்னை வரிசையில் ஒரு வரிசை நடுவது. ஒரு ஏக்கருக்கு 200-225 செடிகள் தேவை. நடும் போது நாற்றின் வேர்பகுதியில் இருக்கும் மண்ணின் மேற்பரப்பும் பூமியின் மேற்பரப்பும் சம அளவில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கால்களால் நாற்றினை மிதித்து விடக் கூடாது.
கவாத்து செய்தல்
நட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பருவ மழை காலங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
அறுவடை
முக்கிய தண்டான சுப்பானில் இருந்தும், விசிறி கிளைகளில் இருந்தும், பூக்கள் மலர்ந்து மஞ்சள் நிறமான பழங்கள் உண்டாகும். கூர்மையான கத்தி கொண்டே கோகோ பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.
பதப்படுத்தும் முறை
அறுவடை செய்த பழங்களை 4முதல்5நாட்கள் நிழலான இடங்களில் குவியலாக வைக்க வேண்டும். பின்னர் பழங்களை உடைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியாக பிரித்து எடுத்து மூங்கில் கூடையில் சேகரிக்க வேண்டும். 3-4 நாட்கள் கூடையில் உள்ள விதைகளை கலக்கிவிடவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரே சீராக விதைகள் பதப்படுத்தப்படுகிறது. அதன் பின்னர் 3-4நாட்கள்
சூரிய ஒளியில் உலர்த்தி காபி நிறத்தில் விதையின் உட்பகுதியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடியில் கிடைக்கும் நன்மைகள்
இரண்டு வருமானம் ஓரே நிலத்தில் கிடைக்கும். மண் வளம் பெருகும். களைகள் கட்டுப்படுத்த முடியும். கோகோ பழத்தின் ஒடு உரமாகவும், கால்நடை தீவனமாக பயன்படுத்தலாம். மேலும்,
தென்னையின் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது அரசு தோட்டக்கலை துறை மூலம் 40 சதவித மானியத்தில் கோகோ நடவு செடிகள் வழங்கப்படுகிறது. பிற தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி மூலம் செடிகள் வழங்குகிறது.
எனவே கூடுதல் வருமானமும், நில வளமும் பெற ஊடு பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
