width:px height:px விவசாயம்

முருங்கையில் பூ உதிர்வதைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?




தேங்காய்ப்பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் பூ உதிர்வதை தவிர்க்கலாம்.

செண்டு மல்லி செடி அதிக புழுக்கள் உள்ளன. அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

கற்பூர கரைசல் தெளிப்பதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

கொய்யாவில் பிஞ்சு உதிராமல் இருக்க என்ன செய்யலாம்?

மீன் அமினோ அமிலம் 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கொய்யா மரத்தின் மேல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிக காய்கள் பிடிக்கும்.

மல்லிகை செடிக்கு கற்பூர கரைசலை எவ்வாறு பயன்படுத்துவது?

இரண்டு லிட்டர் கரைசலில் 15 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம்.

மக்காச்சோளம் பயிரிடும் வயலுக்குள் கிளி, மயில் போன்ற பறவைகளும் வராமல் எப்படி பாதுகாப்பது?

மயில்கள் வராமல் இருக்க மயில்கள் வரும் பகுதிகளில் அழுகிய முட்டைகளை தெளிக்கலாம் அல்லது மீனமிலம் தெளிக்கலாம்.

கிளிகள் வராமல் இருக்க காகிதங்களை வயலில் தொங்கவிடலாம்.

உருவ பொம்மைகளை வைப்பதன் மூலம் கிளிகள் வருவதை தடுக்கலாம். பட்டாசு வைத்து கிளிகளை விரட்டலாம்.

மேட்டங் காடு என்பது எந்த வகை நிலம்? இதில் எவற்றை பயிர் செய்யலாம்? மூலிகை, முருங்கை சாகுபடி மற்றும் மல்பெரி சாகுபடி செய்ய முடியுமா?

மேட்ட ங்காடு என்பது பூஞ்சை சாகுபடி கூறிய மேட்டுப்பாங்கான நிலம். இதில் நிலக்கடலை, ஆமணக்கு ,சோளம் ,துவரை, உளுந்து, மூலிகைகள், முருங்கை போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.

தண்ணீர் கிடைக்கும் சமயத்தில் மல்பெரி சாகுபடி செய்யலாம்.

எள்ளு செடியை மான் இரவு நேரத்தில் மேய்கின்றன. இதனை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

வயலைச் சுற்றிலும் தாவரங்களைக் கொண்டு உயிர்வேலி அமைப்பதின் மூலம் வயலுக்குள் மான் வருவதை தடுக்கலாம்.

மாடு அதிகமாக பால் கொடுக்க எந்த வகை தீவனங்களை தரலாம்?

ஒரு நாளைக்கு இரண்டு கிலோ மற்றும் 4 கிலோ அடர்தீவனம் கொடுப்பதன் மூலம் பாலின் அளவை அதிகரிக்கலாம்.




Site For Sale Contact : 9894832938