இது வெள்ளை ஈக்களால் பரவப்படும் இலை சுருள் வைரஸ் நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் : இலை ஓரங்கள் மேல் நோக்கி சுருண்டும், இலை நரம்புகளுக்கு இடைப்பகுதி மஞ்சள் நிறமாக மாறி, இலைகள் கிண்ணம் போல் இருக்கும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதுடன், பூக்கள் மற்றும் காய்கள் சரியாக உருவாகுவதில்லை.
கட்டுப்பாடு – வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எரித்து விடவேண்டும். மேலும், வைரஸ் நோய் பரவுதலை தடுக்க வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது மிகஅவசியம். வெள்ளை ஈக்களை ஈர்க்கக் கூடிய மஞ்சள் ஒட்டும் அட்டைகளை வயல்களில் பயன்படுத்தி ஈக்களின் நடமாட்டத்தை அறிந்து செயல்பட வேண்டும். வயலின் வரப்புகளில் சோளம், மக்காச்சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு வெள்ளை ஈக்களின் நடமாட்டத்தைக் குறைக்கலாம். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 17.8 SL யை லிட்டர் நீருக்கு 1 மில்லி அல்லது தையோமெதாக்சம் 25 WG ஏக்கருக்கு 100 கிராம் பயன்படுத்தி பயன் பெறலாம்.
