செடி அவரை மற்றும் கொடி அவரை என இருவகைப் படுகிறது. செடி அவரை பூ கொட்டும் பாதிப்பு அதிகம் காணப்படும். அதற்கு ஒரு இயற்கை தீர்வு உண்டு. அதை பற்றி இங்கு காணலாம்.
தயாரிக்கும் முறை
இயற்கை உரம் தயாரிக்க வாழை மரத்தின் பக்க கன்றுகள் 5 வெல்லம் அரை கிலோ மூன்று நாட்கள் புளித்த தயிர் அரை லிட்டர் பெருங்காயப் பொடி 100 கிராம் ஒரு கையளவு முருங்கைக் கீரை மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஆகியவை தேவைப்படும்.
முதலில் வாழை மரக் பக்கக் கன்றுகளைகன்றுகளைசிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பிறகு வெல்லத்தை நன்கு பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வாழைமரத்தின் துண்டுகளை போட்டு ஊற விட வேண்டும்.
அதன்பிறகு பெருங்காயத்தூள் மற்றும் முருங்கைக் கீரையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து அவற்றை மூன்று நாள் புளிக்க வைத்த தயிரில் கரைத்து அதன் பிறகு அதை வெல்லக் கரைசலில் சேர்த்து கலக்கி மூடி விட வேண்டும்.
பிறகு அடுத்த நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து வந்தால் பூக்களும் உதிராமல் இருக்கும்.
வாழைமரம் தனது நுனிப்பகுதியில் பயிருக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் இரவில் சேமித்து வைத்திருக்கும் வெயில் பட்டால் மரத்தின் அடிப்பகுதிக்கு சென்றுவிடும் .அதனால் அதிகாலை 5 மணிக்குள் வாழையின் பக்க கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து புளித்த தயிரில் வளர்ச்சி ஊக்கிகள் பெருங்காயத்தில் பூக்கள் அதிகம் பிடிக்கும் தன்மை போன்ற பலன்கள் உள்ளதால் இது செடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
