நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற பயறு வகைத் தீவனப்பயிர்கள் :
பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச் சத்து அதிகம் உள்ள பயறுவகைத்தீவனங்கள் மிகவும் அவசியமானவை. பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன. புல்வகைத்தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த்தீவனப்பொருட்களை கொடுப்பதற்கு சமமாகும்.
பயறு வகைத் தீவனப்பயிர்களின் குணாதிசியங்கள் :
1. அதிகப் புரதச் சத்து உடையது.
2. அதிக தாது உப்புக்களைக் கொண்டது.
3. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது.
4. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது.
மானாவாரியில் பயிர் செய்வதற்கு ஏற்ற சிறந்த பயறு வகைத் தீவனப்பயிர்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் தட்டைப்பயிறு போன்றவைகள் ஆகும். இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.
